ரஜினிக்கு வில்லனாகும் 'நான் ஈ' சுதீப் | Kochadaiiyaan, Rajini, Sudeep, K.S.Ravikumar கோச்சடையான், ரஜினி, சுதீப், கே.எஸ்.ரவிக்குமார்

வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (10/03/2014)

கடைசி தொடர்பு:15:15 (10/03/2014)

ரஜினிக்கு வில்லனாகும் 'நான் ஈ' சுதீப்

'கோச்சையான்' படத்தையடுத்து ரஜினி நடிக்கும் படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார். இதனை ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார்.

இதில் ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படுகிறது. அவர் நடிக்காத பட்சத்தில் பாலிவுட் ஹீரோயின்களில் யாராவது இறக்குமதி செய்யும் முடிவில் உள்ளனர் படக்குழுவினர்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 'எந்திரன்' படத்தினை ஒளிபதிவு செய்த ரத்னவேலுதான் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

'நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்த சுதீப் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கப்போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

விரைவில் இந்த தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close