தெலுங்கில் ரிலீஸாகும் அஜித் படம்! | Veeram, Ajith, Thamana, Shiva வீரம், அஜித், தமன்னா, சிவா

வெளியிடப்பட்ட நேரம்: 18:25 (10/03/2014)

கடைசி தொடர்பு:18:25 (10/03/2014)

தெலுங்கில் ரிலீஸாகும் அஜித் படம்!

'சிறுத்தை' சிவா இயக்கத்தில் அஜித், தமன்னா, சந்தானம் மற்றும் பலர் நடித்த படம் வீரம். பொங்கல் ரிலீசாக வெளிவந்து ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது.

தமிழில் ரிலீஸானபோதே தெலுங்கிலும் ரிலீஸ் ஆகவிருந்து பின் சில பிரச்சனைகளின் காரணமாக வெளியாகவில்லை.

தற்போது இந்த படம் 'வீருடொக்கடே' என்ற பெயரில்தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வருகிற மார்ச் 21ம் தேதி ரிலீசாகவுள்ளது.

அஜித் படங்களுக்கு தெலுங்கில் நல்ல மார்கெட் இருப்பதாலும், தமன்னா, சிவா, தேவி ஸ்ரீ பிரசாத் போன்ற  போன்ற பிரபலங்கள் படத்தில் பணியாற்றியிருப்பதாலும் தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close