வெளியிடப்பட்ட நேரம்: 14:49 (21/04/2014)

கடைசி தொடர்பு:14:49 (21/04/2014)

இரு விருதுகள் பெற்ற வைக்கம் விஜயலட்சுமி!

'செல்லுலாய்டு' படத்தில் காற்றே காற்றே பாடல் மூலமாக அறிமுகமானவர் வைக்கம் விஜயலட்சுமி. ஒரு பாட்டின் மூலமே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.

டி.இமான் இசையில் உருவான 'என்னமோ ஏதோ' படத்தில் புதிய உலகை பாடல் மூலமாக தமிழில் அறிமுகமானார். பிறகு 'குக்கூ' படத்தில் கோடையில மழ போல பாடலைப் பாடினார்.

சமீபத்தில் வழங்கப்பட்ட 44வது கேரள மாநில மொழித்திரைப்பட விருதுகளில் இரண்டு விருதுகள் இவரின் வசம். விருதுகள் வாங்கியதை விட ஆச்சர்யம் இவர் மலையாளத்தில் மொத்தம் பாடியதே இரண்டு பாடல்கள் தான். அந்த இரண்டு பாடல்களுக்காகவும் இவர் விருது பெற்றிருக்கிறார்.

விழியால் பார்க்கமுடியா இந்த உலகை ஒலியால் இவர் பார்ப்பதற்கு சாட்சி இவரது பாடல்களே.  இவ்விருதுகள் உண்மையாகவே இவரின் திறமைக்கான அங்கீகாரம் தான்.

வாழ்த்துகள் விஜயலட்சுமி!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்