நாக சைதன்யாவுக்கு நெருக்கமான சமந்தா! | சமந்தா, நாக சைதன்யா, மகேஷ் பாபு, samantha, naga saithanya, mahesh babu

வெளியிடப்பட்ட நேரம்: 17:04 (22/04/2014)

கடைசி தொடர்பு:17:04 (22/04/2014)

நாக சைதன்யாவுக்கு நெருக்கமான சமந்தா!

மூன்று தலைமுறை நடிகர்கள் நடிக்கும் ஒரே படம் என்ற பெருமையுடன் தெலுங்கில் தயாராகி வருகிறது 'மனம்' . நாகேஸ்வர ராவ், நாகார்ஜூனா, நாக சைதன்யா ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இதில் நாகார்ஜூனாவுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்துள்ளார். நாக சைதன்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இதில் சமந்தா நாக சைதன்யாவுடன் கொஞ்சம் நெருக்கமாகவே நடித்துள்ளாராம். அதற்கு வேறு வகையான காரணங்களும் சொல்லப்படுகிறது.

மகேஷ்பாபுவின் 'நேனொக்கடய்னே' பட போஸ்டர் குறித்து கருத்து சொல்லி பரபரப்பில் சிக்கினார் சமந்தா. பெண்களை இழிவுபடுத்துவதாக சொன்ன சமந்தாவின் குற்றச்சாட்டால்,  பல்வேறு கருத்து வேறுபாடுகள் முளைத்தன. இதனால் மகேஷ்பாபு ரசிகர்கள் சமந்தாவைத் திட்டித் தீர்த்தனர்.

படமும் சரியாக ஓடவில்லை. இதனால் கோபப்பட்ட மகேஷ்பாபு 'சமந்தாவின் கருத்து பெண்களைத் திசை திருப்பி விட்டது. அது படத்துக்கு பாதிப்பையும் ஏற்படுத்திவிட்டது.'என்றார்.

தெலுங்குப் படங்களில் சமந்தா நடிக்கவே கூடாது என்று எதிர்ப்புக் குரல்கள் வலுத்தன. இதையெல்லாம் மனதில் வைத்துதான் தெலுங்கில் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்க சமந்தா நாக சைதன்யாவுடன் நெருக்கமாக நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்