வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (20/05/2014)

கடைசி தொடர்பு:12:35 (20/05/2014)

இந்தியில் ரீமேக் ஆகும் 'மும்பை போலீஸ்!'

ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் பிருத்விராஜ், ரகுமான், ஜெய்சூர்யா ஆகியோர் நடித்து வெளியான படம் 'மும்பை போலீஸ்'. இப்படம் மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றியடைந்தது.

தற்போது இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. இப்படத்தை இயக்குபவர் 'எ வெட்னஸ் டே', 'ஸ்பெஷல் 26' ஆகிய படங்களை இயக்கிய நீரஜ் பாண்டே.

இந்தியில் ஜான் ஆபிரஹாம் ஹீரோவாக நடிப்பார் என்றும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிப்புகள் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

மலையாளத்தில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கிய 'உதயானு தாரம்' படம் தமிழில் 'வெள்ளித்திரை' எனவும், இந்தியில் நீரஜ் பாண்டே இயக்கிய 'எ வெட்னஸ் டே' தமிழில் 'உன்னைப்போல் ஒருவன் எனவும் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்