வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (28/05/2014)

கடைசி தொடர்பு:18:00 (28/05/2014)

மல்லுவுட்டில் மல்டி ஸ்டார் படம்!

எந்த மொழி சினிமாவிலும் அவ்வளவு சாதாரணமாக நடக்காத விஷயங்கள் மல்லுவுட்டில் மட்டும் சர்வ சாதாரணமாக நடந்துவிடுகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

சினிமாவில் முன்னணியில் இருக்கும் இரண்டு நடிகர்களை ஒரே படத்தில் நடிக்க வைப்பதற்கு பெரும் முயற்சிகள் செய்யவேண்டும். ஆனால், மலையாள சினிமாவில் ஒரே படத்தில் ஏழு முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

ஃபஹத் பாசில், நிவின் பவுலி, துல்கர் சல்மான், நஸ்ரியா, பார்வதி மேனன், நித்யா மேனன், இஷா தல்வார் ஆகிய ஏழு பேரும் 'பெங்களூர் டேஸ்' எனும் படத்தில் நடித்துள்ளனர். இந்தியில் கூட இந்த அளவுக்கு மல்டி ஸ்டார் படங்கள் வந்ததில்லை.

அஞ்சலி மேனன் இயக்கிய 'பெங்களூர் டேஸ்' மே 30ல் ரிலீஸ் ஆகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்