ஸ்ரீப்ரியா இயக்கத்தில் 'த்ரிஷ்யம்!' | Drishyam, Sripriya, Venkatesh, Meena, Sharrath, த்ரிஷ்யம், ஸ்ரீப்ரியா, வெங்கடேஷ், மீனா, ஷரத்

வெளியிடப்பட்ட நேரம்: 14:59 (09/06/2014)

கடைசி தொடர்பு:14:59 (09/06/2014)

ஸ்ரீப்ரியா இயக்கத்தில் 'த்ரிஷ்யம்!'

ரஜினி, கமல் எனப் பல நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரீப்ரியா சமீபத்தில் வெளியான 'மாலினி 22 பாளையங்கோட்டை' படம் மூலம் இயக்குநர் ஆனார்.

மலையாளத்தில் மோகன் லால் நடித்து வெற்றி பெற்ற 'த்ரிஷ்யம்' படம் தற்போது தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் அதே பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இப்படத்தை ஸ்ரீப்ரியா இயக்குகிறார்.

மோகன் லால் நடித்த கதாபாத்திரத்தில் வெங்கடேஷ் நடிக்கிறார். மலையாளத்தில் மீனா நடித்த கதாபாத்திரத்தில் மீனாவே நடிக்கிறார்.

ஜூன் ஆர், 180 போன்ற படங்களுக்கு இசையமைத்த ஷரத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபால் ரெட்டி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

தொடர்ச்சியாக இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஜூலை மாதத்தில் இப்படம் ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்