வெளியிடப்பட்ட நேரம்: 15:08 (10/06/2014)

கடைசி தொடர்பு:15:08 (10/06/2014)

ஃபஹத் பாசில் ஜோடியாக நடிக்க மறுத்த நஸ்ரியா!

நஸ்ரியா நசீம்  ஃபஹத் பாசிலை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி இவர்கள் திருமணம் நடக்க இருக்கிறது. இந்த நிலையில் ஃபஹத் பாசிலுக்கு ஜோடியாக நடிக்க நஸ்ரியா மறுத்துவிட்டாராம்.

இயக்குநர் சந்தோஷ் நாயர் மலையாளத்தில் ஒரு படத்தை இயக்குகிறார். சமூகத்துக்காக போராடும் ஒரு பெண்ணின் கதையைப் படமாக்குகிறார். இதில் நஸ்ரியா நடித்தால் நன்றாக இருக்கும் என்று விரும்பியவர், நஸ்ரியாவிடம் கதை சொன்னார்.

ஆரம்பத்தில் ஓ.கே சொன்ன நஸ்ரியா திருமணம் நெருங்குவதால் இப்போது நடிக்க மறுத்துவிட்டார்.அதனால் நஸ்ரியாவுக்குப் பதில் நிவேதா நடிக்கிறார்.

ஃபஹத் பாசில் கொச்சியில் கார் ஷோரூம் வைத்திருக்கும் ஜான் சாமுவேல் கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணாக நஸ்ரியா நடிக்க வேண்டும். திருமணம் நிச்சயிக்கப்பட்டலிருந்து திருமணம் ஆகிற வரை இருவருக்கும் உள்ள உறவை பற்றிய கதை இது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்