சித்தார்த்தின் ஹாட்ரிக்!

ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படம் மூலம் அறிமுகமானவர் சித்தார்த். அதனைத் தொடர்ந்து தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து முன்னணி ஹீரோ வரிசையில் இருக்கிறார்.

தற்போது அடுத்தடுத்த மூன்று தமிழ்ப் படங்களின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். 'ஜிகர்தண்டா', 'காவியத்தலைவன்', 'லூசியா' என மூன்றுமே மிக முக்கியமான படங்கள்.

இது குறித்து சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில், "மிக விரைவில் 'ஜிகர்தண்டா' வெளியாக உள்ளது, 'காவியத்தலைவன்' மற்றும் 'லூசியா' ஆகிய இரு படங்களும் இறுதிகட்டப் பணிகளில் உள்ளன. இப் படங்களின் வெளியீட்டிற்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.

 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் 'ஜிகர்தண்டா' படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 'பீட்சா' படத்தின் வெற்றிக்குப் பிறகு வெளியாகும் இப்படம் ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் இவ்வருடத்தில் மிகுந்த எதிர்பார்ப்புள்ள படங்களில் ஒன்று என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

வசந்தபாலன் இயக்கத்தில் தயாராகிவரும் 'காவியத்தலைவன்' படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது.

புதுமுக இயக்குநர் பிரசாந்த் இயக்கும் 'லூசியா' படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படம் கன்னடத்தில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்ற 'லூசியா' படத்தின் ரீமேக்.

இம்மூன்று படங்கள் மூலம் சித்தார்த் ஹாட்ரிக் வெற்றி பெறுவாரா? எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!