பாகுபலி படப்பிடிப்பில் தமன்னாவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு!

'ஈகா' படத்திற்குப் பிறகு எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிக் கொண்டிருக்கும் தெலுங்குப் படம் 'பாகுபலி'. இப்படத்தில் பிரபாஸ், ராணா மற்றும் அனுஷ்கா, தமன்னா நடிக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தில் தமன்னா நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கியது. தமன்னா வந்ததும் படக்குழு அவருக்கு பலத்த வரவேற்பைக் கொடுத்ததாம். இதை சற்றும் எதிர்பாராத தமன்னா இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளார்.

இப்படத்தில், பாகுபலியாக பிரபாஸும், பல்லால தேவாக ராணாவும், தேவசேனாவாக அனுஷ்காவும், அவந்திகாவாக தமன்னாவும் நடிக்கின்றனர்.சிறிது இடைவேளைக்குப் பிறகு படபிடிப்பை தொடங்கும் படக்குழு இவ்வருடம் இறுதி வரை படபிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கும் இப்படத்திற்கு, கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்கா மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் இப்படத்தை 2015 ஆம் வருடம் கோடைக்கால விருந்தாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!