ஜூனியர் என்.டி .ஆருடன் நடிக்க விரும்பும் அலியா பட்! | junior NTR, alia bhatt, humpty sharma ki dulhania, sidharth malhothra,

வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (27/06/2014)

கடைசி தொடர்பு:11:30 (27/06/2014)

ஜூனியர் என்.டி .ஆருடன் நடிக்க விரும்பும் அலியா பட்!

பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட்டின் மகளும், இம்ரான் ஹாஷ்மியின் உறவுப் பெண்ணான அலியா பட் வெறும் நான்கே படங்களில், பாலிவுட் ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த நாயகியாக மாறியுள்ளார்..

இவரது எதார்த்த நடிப்பும், குறும்புடன் கூடிய அழகும் அனைத்து இளைஞர்களுக்கும் பிடித்து விட முன்னனி கதாநாயகி ரேஸில் இணைந்து விட்டார்.

'ஹைவே','ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்', '2 ஸ்டேட்ஸ்' என வெளியான மூன்று படங்களுமே வசூலைக் குவிக்க ராசியான நாயகி ஆகிவிட்டார்.இம்மூன்று படங்களை அடுத்து அலியா பட் - சித்தார்த் மல்ஹோத்ராவுடன் இணைந்து நடித்து வெளியாகவிருக்கும் 'ஹம்டி ஷர்மா கி துல்ஹானியா' திரைப்படத்தின் புரமோஷனுக்காக சமீபத்தில் ஹைதராபாத் சென்று வந்தார்.

'தெலுங்குப் படங்களில் கண்டிப்பாக நடிப்பேன். எனக்கு தெலுங்கு டாப் ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆருடன் நடிக்க ஆசை' என தெரிவித்துள்ளார் .

என்.டி.ஆருடன் நடிக்க விருப்பம் தெரிவித்த அலியா பட்,  தனுஷ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன்? என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது..

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close