தெலுங்கில் ரீமேக் ஆகும் மஞ்சப்பை! | மஞ்சப்பை, தெலுங்கு ரீமேக் , விஷ்ணு. manjapai, telugu remake, vishnu

வெளியிடப்பட்ட நேரம்: 11:38 (28/06/2014)

கடைசி தொடர்பு:11:38 (28/06/2014)

தெலுங்கில் ரீமேக் ஆகும் மஞ்சப்பை!

'மஞ்சப்பை' படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. தாசரி நாராயணராவ் இப்படத்தை இயக்கப் போகிறார்.

சற்குணத்தின் உதவியாளர் ராகவன் இயக்கத்தில் விமல், லட்சுமிமேனன், ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த படம் 'மஞ்சப்பை'. இதில் தாத்தாவாக நடித்த ராஜ்கிரண் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. படத்தின் வசூலும் 10 கோடியைத் தாண்டியது.

இந்நிலையில். 'மஞ்சப்பை' படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. பிரபல இயக்குநர் தாசரி நாராயணராவ் இப்படத்தை இயக்குகிறார். விமல் கேரக்டரில் மோகன்பாபு மகன் விஷ்ணு நடிக்கிறார். ராஜ்கிரண் கேரக்டரில் இயக்குநர் தாசரி நாராயணராவே நடிக்கிறார்.

தாசரி நாராயணராவ் 150 படங்களுக்கு மேல் இயக்கியவர். பல படங்களில் குணச்சித்ர கேரக்டர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close