வெளியிடப்பட்ட நேரம்: 14:43 (28/06/2014)

கடைசி தொடர்பு:14:43 (28/06/2014)

அமானுஷ்யங்களை மையமாகக் கொண்ட ஜித்தன் - 2 !

'ஜித்தன்' என்ற பெயரில் 2005ம் வருடம் வெளியானது. ரமேஷ் ,பூஜா, சரத்குமார் ஆகியோர் நடித்து வெளியாகி அனைவரிடமும் வரவேற்பைப் பெற்றது. 

இதனால், ரமேஷின் பெயருக்கு முன்னால் 'ஜித்தன்' என்ற படத்தின் பெயரும் சேர்ந்து கொண்டது.தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

'ஜித்தன்' ரமேஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். மும்பையின் பிரபல விளம்பர மாடல்களான இவர்களுக்குத் தமிழில் இது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட சில அமானுஷ்யங்களின் அடிப்படையில் நடக்கும் சம்பவங்களின் கோர்வையே 'ஜித்தன் 2' படத்தின் கதை.

ராகுல் பரமஹம்சா இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.முதல் பாகமான ஜித்தனுக்கு இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவாவே இரண்டாம் பாகத்திற்கும்  இசையமைக்கிறார்.
நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்