தெலுங்கு படத்தில் நடிக்கிறாரா கமல்?
ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உத்தம வில்லன் படத்தில் நடித்து வருகிறார் கமல்.
இரட்டைவேடத்தில் கமல் நடிக்கும் இப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகே 'விஸ்வரூபம்-2' வெளியிடப்படும் என அறிவித்திருக்கிறார் அவர்..
இவ்விரண்டு படங்களை அடுத்து கமல் தெலுங்கு படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின..
இதற்கு தற்போது கமலே பதிலளித்துள்ளார்.'உத்தம வில்லன்' ,'விஸ்வரூபம்-2' படங்களை அடுத்து தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளேன்.
அதற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறேன் எனவும் கூறியுள்ளார் அவர்..
மேலும் படம் முடிவானால் அந்த தெலுங்கு படத்தை கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் எனவும் அறிவித்துள்ளார்..