வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (08/08/2014)

கடைசி தொடர்பு:11:45 (08/08/2014)

த்ரிஷாவின் ஏழு படங்கள்!

1999ம் ஆண்டின் சென்னை அழகியாக வெற்றி பெற்று அதே ஆண்டு 'ஜோடி' படம் மூலம் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர் த்ரிஷா. சினிமாவிற்குள் இவர் நுழைந்து 15 வருடங்கள் கடந்துவிட்டன.

எனினும் இவருக்கு இன்னும் மவுசு குறைந்த பாடில்லை. தற்சமயம் மட்டும் ஏழு படங்கள் த்ரிஷா வசமிருக்கிறது. ஜெயம் ரவியுடன் நடித்து 'பூலோகம்' படம் ரிலீசுக்காக காத்திருக்கிறது.கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்தின் 55வது படம், ஜெயம் ரவி, அஞ்சலி நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் இன்னொரு நாயகி த்ரிஷா தான்.

மணிமாறன் இயக்கத்தில் ஜெய் படத்தின் நாயகி, மற்றும் பாலிவுட்டின் குயின் படத்தின் தமிழ் ரிமேக் என தமிழில் மட்டும் 5 படங்கள்.

தெலுங்கில் வெற்றிபெற்ற 'தூக்குடு' படத்தின் கன்னட ரீமேக் 'பவர்' படத்தில் புனித் ராஜ்குமாருடன் இணைந்து நடித்து விரைவில் வெளிவர உள்ளது. 'பவர்' த்ரிஷாவின் முதல் கன்னட படம் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் ஜோடியாக புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க