ஆகஸ்ட் 22ல் வெளியாகும் 10 படங்கள்! | aintham thalaimurai sithavaithiya sigamani, aal, if i stay, sin city, when the game stands tall, mumbai connection. mega, mardaani,

வெளியிடப்பட்ட நேரம்: 13:52 (12/08/2014)

கடைசி தொடர்பு:13:52 (12/08/2014)

ஆகஸ்ட் 22ல் வெளியாகும் 10 படங்கள்!

தமிழில் ஆகஸ்ட் 15 மற்றும் 29ம் தேதிகளில் சில பெரிய படங்கள் வெளியாவதால் சில சின்ன பட்ஜெட் படங்கள் ஆகஸ்ட் 22ம் தேதியில் ரிலீஸ் ஆகின்றன. 

தமிழில் மட்டும் இதே நாளில் மூன்று படங்கள் வெளியாக உள்ளன.

பரத்தின் 25வது படமான 'ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி', இளையராஜா இசையில் அஸ்வின், ஷ்ருஸ்டி நடிக்கும் 'மேகா', மற்றும் விதார்த் நடித்த 'ஆள்' ஆகிய மூன்று படங்கள் வெளியாக உள்ளன.

இதே தேதியில் பாலிவுட்டில் அதிக எதிர்பார்ப்புக்குள்ளான, ராணி முகர்ஜி நடித்து 'மர்தாணி' வெளியாக உள்ளது. மேலும் 'மும்பை கனெக்‌ஷன்' , மற்றும் 'மேட் அபௌட் டான்ஸ்' படங்களும் ரிலீஸ் ஆகின்றன.

ஆகஸ்ட் 22ம் தேதியை குறிவைத்து ஹாலிவுட்டில், 'சின் சிட்டி-2' படமும்,  வார்னர் பிதர்ஸின் 'இஃப் ஐ ஸ்டே', மற்றும் 'வென் தி கேம் ஸ்டான்ட்ஸ் டால்' ஆகிய படங்களும் வெளியாக உள்ளன.

இந்த ஒன்பது முக்கிய படங்களுடன் இணைந்து தெலுங்கில் ஸ்வாதி நடித்த 'ஸ்வாமி ராரா' என்னும் படம் 'கார்த்திகேயன்' என தமிழிலும் டப்பாகி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close