பாபநாசம் படத்தில் மோகன்லால் மகன் ப்ரணவ்! | பாபநாசம், கமல், கௌதமி, நிவேதா தாமஸ், ஜிப்ரான், papanasam, kamal haasan, gauthami,

வெளியிடப்பட்ட நேரம்: 11:03 (01/09/2014)

கடைசி தொடர்பு:11:03 (01/09/2014)

பாபநாசம் படத்தில் மோகன்லால் மகன் ப்ரணவ்!

மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற 'த்ரிஷ்யம்' படம் தற்போது தமிழில் கமல், கௌதமி, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடிக்க 'பாபநாசம்' எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. 

படத்திற்கு ஏகோபித்த எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில் , தற்போது புதிதாக இணைந்துள்ளார் ப்ரணவ். இவர் மலையாளத்தின் முன்னணி நடிகர் மோகன்லாலின் மகன்.

 

இந்த படத்தின் மூலம் ப்ரணவ் தமிழில் அறிமுகம் ஆகிறார். மேலும், இவரது பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிராமத்துப் பின்னணியில் நடக்கும் கதைக்களமான 'பாபநாசம்' படத்திற்கு  ஜிப்ரான் இசையமைக்கிறார். மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப் தமிழிலும் இயக்குகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்