விஜய், சூர்யாவிற்கு மம்மூட்டி மை ட்ரீ சேலஞ்ச்!

சமீபத்தில் விழிப்பு உணர்வுக்காக ஐஸ் பக்கெட் சேலஞ்ச் எடுத்து வரும் வீடியோக்கள் இணையத்தில் கலக்கி வருகின்றன. 

இந்த சேலஞ்சை மையோட்ரோபிக் லேட்டரல் ஸ்கெலரோஸிஸ் எனும் ஏஎல்எஸ் நோய்க்கான நிதி திரட்டுவதற்காக செய்து வருகின்றனர்.

பல சினிமா பிரபலங்கள் இந்த ஐஸ் பக்கெட் சேலஞ்சை தீவிரமாக செய்து வரும் நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி தற்போது 'மை ட்ரீ சேலஞ்சை' எடுத்துள்ளார். 

அதாவது மரம் நடும் சேலஞ்ச், மரம் நடுவதால் பூமியின் வாழ்நாள் நீடிக்கும், என்பதால் மரம் நடுவதை முன் வைத்து மம்மூட்டி உள்ளிட்ட மலையாள நடிகர்கள் பலரும் இந்த வித்தியாசமான சவாலை முன்வைத்து வருகின்றனர்.

இந்த சேலஞ்சால் மரம் நடும் பழக்கம் பூமியில் பரவி இயற்கை வளம் அதிகரிக்கும் என்பதாலும் மேலும் பலருக்கு முன்னோடியாக இருக்கும் சினிமா பிரபலங்கள் செய்தால் இது இன்னும் சற்று வேகமாக பரவும் என்பதால் இந்த சேலஞ்சை நான் வரவேற்கிறேன் என கூறியுள்ளார் மம்மூட்டி.

இந்த 'மை ட்ரீ சேலஞ்சை' நான் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மற்றும் தமிழ் நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவுக்கு வைக்கிறேன் என தனது இணையதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மம்மூட்டி. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!