வெளியிடப்பட்ட நேரம்: 18:42 (23/09/2014)

கடைசி தொடர்பு:18:42 (23/09/2014)

ஆக்‌ஷன் அவதாரம் எடுத்த காத்ரீனா கைஃப் !

ஹாலிவுட்டில் டாம் குரூஸ், கேமரான் டயாஸ் நடித்து ஹிட்டடித்த படம் ’நைட் அண்ட் டே’. இப்படத்தின் ரீமேக்தான் ஹ்ருத்திக் ரோஷன் மற்றும் காத்ரீனா கைஃப் நடித்திருக்கும் ’பேங் பேங்’.

சித்தார்த் ஆனந்த் இயக்கியிருக்கும் இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தின் கதை கடத்தப்படும் ஒரு மைக்ரோ சிப்பை மையாக வைத்து நகரும்.

படத்தின் கதைப்படி காத்ரீனா கிளாமர் மற்றும் ஆக்‌ஷனிலும் நடித்தாக வேண்டும். இதற்காக பல ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார் காத்ரீனா.

படத்தின் ஒரு காட்சியில் தண்ணீர் வாகனத்திலும் தைரியமாகப் பயிற்சி எடுத்துக் கொண்டு சீறிப் பாய்ந்துள்ளார்.

'பேங் பேங்' அக்டோபர் 2ம் தேதி இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்