வெளியிடப்பட்ட நேரம்: 10:48 (30/09/2014)

கடைசி தொடர்பு:10:48 (30/09/2014)

எதிர்பார்ப்பில் யுவன் இசையமைக்கும் படங்கள்!

'கத்தி’, ‘ஐ’ மற்றும் ‘பூஜை’ ஆகிய படங்கள் தீபாவளி ரிலீஸ் என அறிவித்துள்ள நிலையில் ‘கத்தி’ மற்றும் ‘ஐ’ படங்கள் தங்களது இசை மற்றும் டீஸரை ஏற்கனவே வெளியிட்டுவிட்டன.

’பூஜை’ படத்தின் பாடல்கள் அக்டோபர் 1ம் தேதியான நாளை வெளியாக உள்ளது. ஹரி இயக்கத்தில் விஷால், ஸ்ருதி ஹாசன் நடித்து வரும் இப்படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. பிரபல பண்பலையில் அக்டோபர் 1 காலையில் 'பூஜை' படத்தின் இசை வெளியீடு  நடைபெற உள்ளது.

தெலுங்கில் யுவன் ஷங்கர் ராஜா  இசையமைத்துள்ள  ‘கோவிந்துடு அந்தரிவாடிலே’ படம் நாளை வெளியாக உள்ளது.

ராம் சரண், காஜல் அகர்வால், கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்து வரும் ‘கோவிந்துடு அந்தரிவாடிலே' படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இது மட்டுமல்லாமல் 2014ல் மட்டும்  ’சிப்பாய்’, ‘வை ராஜா வை’, ’தரமணி’, ’இடம் பொருள் ஏவல்’, ’யட்சன்’, நீ நல்லா வருவடா’,  ‘மாஸ்’ உள்ளிட்ட படங்கள் யுவன் இசையில் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்