ஒரு நாயகி உதயமாகிறார்!

2006ல் சூர்யா & ஜோதிகா நடித்த ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில், ஜோதிகா, பூமிகாவை விட மனதில் நின்றவர் ஷ்ரியா ஷர்மா. அப்போது ஷ்ரியாவுக்கு 9 வயது. 2010ல் வெளிவந்த எந்திரனில் நடித்தபோது, 13 வயது. இதுபோக ஷாரூக்கான், சிரஞ்சீவி, மகேஷ்பாபு என்று அனைத்திந்திய ஸ்டார்களுடன் குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமான பெருமை ஷ்ரியாவுக்கு உண்டு.

'My Princess, will miss your smile.' என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் அனுப்பிய கடிதத்தை இன்றும் பத்திரமாகப் பாதுகாத்து வருவதாகச் சொல்கிறார் ஷ்ரியா. இது போக பல்வேறு விளம்பரப் படங்களிலும் இந்தக் குழந்தை தரிசனம் தந்திருக்கிறது.இப்போ விஷயம் இதுவல்ல. செப்டம்பர் 1997&ல், குளுகுளு இமாச்சலப் பிரதேசத்தில் பிறந்த ஷ்ரியா - இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார். ஆனால், நமக்கு இல்லை இந்தப் பாக்கியம். தெலுங்குவில் ‘காயக்கடு’ என்னும் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி இருக்கிறார் ஷ்ரியா. படத்தைப் பார்த்துட்டு ஃபீல் பண்ணுங்க மக்கா!

- தமிழ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!