பாகிஸ்தான் ஹேக்கர்களுக்குப் பதிலடி கொடுத்த மோகன்லால் ரசிகர்கள்!

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஹேக்கர்ஸ் இந்திய டாப் நடிகர்களின் அதிகார பூர்வ இணையதளங்களை முடக்கி வருகின்றனர்.

இந்த வரிசையில் சமீபத்தில் மலையாள டாப் ஸ்டார் மோகன்லாலின் அதிகாரப்பூர்வ இணையத்தை முடக்கி அதில் பாகிஸ்தான் கொடியை பறக்க விட்டனர்.

இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மோகன்லாலின் ரசிகர்கள் சிலர் பாகிஸ்தான் ரயில்வே இணையதளம் மற்றும் இன்னும் இரண்டு அரசு சார் இணையதளங்களை முடக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹேக் செய்ததோடு மட்டுமல்லாமல் அந்த பக்கத்தில் மோகன்லாலின் ‘ஸ்படிகம்’ திரைப்பட போட்டோவையும் பதிவிட்டு அவரது பிரபல வசனமான ‘நீ போ மோனே தினேஷா’ எனவும் போட்டுள்ளனர்.

ஏற்கெனவே இதேபோல் தமிழ் இணையதளங்கள் உட்பட பல இந்திய இணையதளங்கள் பாகிஸ்தானிய ஹேக்கர்களால் முடக்கப்பட்டன.

அதற்கு பதிலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு விட்டுவிட்டனர். இந்நிலையில் தற்போது மோகன்லால் ரசிகர்கள் பெயரில் இந்த பதிலடி ஹேக் விவகாரம் பாகிஸ்தான் உட்பட இந்தியாவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!