நாகார்ஜூனாவுடன் இணையும் கார்த்தி! | நாகார்ஜூனாவுடன் இணையும் கார்த்தி! , நாகார்ஜூனா, கார்த்தி, தமிழ், தெலுங்கு, வம்சி

வெளியிடப்பட்ட நேரம்: 13:44 (18/10/2014)

கடைசி தொடர்பு:13:44 (18/10/2014)

நாகார்ஜூனாவுடன் இணையும் கார்த்தி!

'மெட்ராஸ்' படத்தின் வெற்றிக்குப் பிறகு மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் கார்த்தி. முத்தையா இயக்கத்தில் 'கொம்பன்' படத்தில் நடித்துவரும் கார்த்தி அடுத்து நாகார்ஜூனாவுடன் இணைந்து நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் உருவாக உள்ளது. லாவிஷ் புரொடக்‌ஷனும், பிவிபி சினிமாஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது.

'முன்னா', 'பிருந்தாவனம்', 'எவடு' ஆகிய படங்களை இயக்கிய வம்சி இப்படத்தை இயக்குகிறார். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

ஹீரோயின் உட்பட மற்ற கதாபாத்திரங்களின் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close