சன்னி லியோன் மீது கடுப்பான ரகுல் ப்ரீத் சிங்!

இளசுகளுக்கு சன்னி லியோனைத் தெரியவில்லை என்றால்தான் அபத்தம்! வெளிநாடுகளில் எப்படியோ, தமிழ்நாட்டில் ‘வடகறி’ சன்னி லியோன் என்றால் அவ்வளவு பிரசித்தம்.

ஐட்டம் டான்ஸ் என்னும் பெயருக்கு ஏற்ற நடை, உடை (?), பாவனைகள் கொண்ட சன்னி லியோன், ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி, போர்னோ படங்களில் நடித்ததை விட அதிகம் சம்பாதித்தார். ‘தமிழ்நாட்ல நமக்கு இவ்வளவு கிரேஸா’ என்று வியந்து போனவர், இப்போது ஆந்திரா பக்கமும் ஐட்டம் டான்ஸ் பண்ண ஆரம்பித்து விட்டார்.

தமிழில் மெகா ஹிட் அடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம், ‘கரன்ட் தீகா’ என்னும் பெயரில் தெலுங்கில் லேட்டஸ்ட்டாக வெளிவந்திருக்கிறது. தமிழில் டீச்சர் வேடத்தில் பிந்து மாதவி நடித்த வேடத்தில், நம்ம ‘வடகறி’ சன்னி  இதில் செம கவர்ச்சி டீச்சராக நடித்திருக்கிறார்.

‘வ.வா.ச’ தமிழ்ப் படத்தில் பிந்து மாதவிக்குப் பாடல் காட்சி கிடையாது. ஆனால், தெலுங்கில் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் செட் போடப்பட்டு, ‘தேவதாஸ் ப்ரேக்-அப்’ என்னும் சன்னி லியோனின் கிளுகிளு பாடல் மூலம், இளசுகள் மத்தியில் ஷாக் அடித்திருக்கிறது ‘கரன்ட் தீகா’!

இந்தக் காட்சிக்கு சன்னியின் இரண்டு நாள் கால்ஷீட்டுக்கு வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஜஸ்ட் 75 லட்சம்! இதை அந்தப் படத்தின் ஹீரோ மஞ்சு மனோஜ், ஒரு தெலுங்கு பத்திரிகைப் பேட்டியின்போது, விதிகளை மீறி உளறிக் கொட்டிவிட்டார்.

இதில் தெலுங்கு நடிகைகள் அனைவரும்,  சன்னியின் மீது செம கடுப்பில் இருக்கிறார்களாம். முக்கியமாக,‘கரன்ட் தீகா’ படத்தின் நாயகி ரகுல் ப்ரீத் சிங், ‘‘மாசக்கணக்குல ஷூட்டிங் போற எங்களுக்கே சம்பளம் 40 லட்சத்தைத் தாண்டலை. இரண்டு நாள் கால்ஷீட்டுக்கு இம்புட்டு பணமா?’’ என்று சன்னி லியோன் மீது மிகவும் மனவருத்தத்தில் இருக்கிறாராம்.

தோசைக்கேத்த காசுதானுங்க அம்மணி கிடைக்கும்!

- தமிழ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!