கன்னட சூப்பர்ஸ்டார் நினைவிடம் திறப்பு - இந்திய சூப்பர் ஸ்டார்களுக்கு அழைப்பு!

கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக 46 ஆண்டுகாலம் இருந்தவர் ராஜ்குமார். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ராஜ்குமார் கடந்த 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.

தற்போது இவரைக் கௌரவிக்கும் வகையில் கன்னட அரசாங்கமே இவருக்கு 7 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைத்துள்ளது. 3 அடியில் வெண்கல சிலையும், 800 இருக்கைகளும் கொண்ட இந்த நினைவிடம் ராஜ்குமாரின் சமாதி அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா வரும் நவம்பர் 29ம் தேதி  கர்நாடகாவில் நடைபெற உள்ளது. கர்நாடகா அரசாங்கமே சிறப்பாக அனைத்து சூப்பர் ஸ்டார்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

ரஜினிகாந்த், கமல ஹாசன், மம்மூட்டி, அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, மோகன்லால் உள்ளிட்ட இந்தியா சினிமா சூப்பர் ஸ்டார்கள் மேலும் ஆம்பரிஷ், சரோஜா தேவி உள்ளிட்ட பழம்பெரும் நடிகர்களுக்கும் அழைப்புகள் தரப்பட்டுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!