படப்பிடிப்பில் அனுஷ்காவுக்கு அடி! | அனுஷ்கா, ருத்ரமாதேவி, தெலுங்கு, anushka, telugu, thala 55, lingaa, anushka, லிங்கா, தல 55

வெளியிடப்பட்ட நேரம்: 17:06 (29/10/2014)

கடைசி தொடர்பு:17:06 (29/10/2014)

படப்பிடிப்பில் அனுஷ்காவுக்கு அடி!

'அருந்ததி’ , ‘பஞ்சமுகி’ படங்களுக்கு பிறகு மீண்டும் அனுஷ்கா முழுநீள ஹீரோயின் கதையம்சம் கொண்ட படமாக ‘ருத்ரமாதேவி’ படத்தில் நடித்து வருகிறார். 

இப்படத்திற்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கும் அனுஷ்கா படத்தில் வாள் சண்டை , சிலம்பம் என ஆக்‌ஷனிலும் திறமை காட்டியுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது வில்லனுடன் மோதும் காட்சியில் அடிபட்டு ரத்தமே வர அதையும் பொருட்படுத்தாது மீண்டும் நடித்திருக்கிறார்.

அரச கதையாக உருவாகி வரும் இப்படம் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் அனுஷ்கா பயன்படுத்திய நகைகள் மட்டும் 5 கோடி மதிப்புடையதாம்.

அனுஷ்காவை தவிர வேறு எந்த ஹீரோயினாக இருப்பினும் படம் இவ்வளவு குறுகிய கால இடைவெளியில் முடித்திருக்க முடியாது என படக்குழுவினர் அனுஷ்கா குறித்து பகிர்ந்துள்ளனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்