மூன்று மொழிகளில் ரிலீஸ் ஆகும் 'லிங்கா!' | லிங்கா, ரஜினி, ஈராஸ் நிறுவனம், மூன்று மொழிகளில் ரிலீஸ் ஆகும் 'லிங்கா!'

வெளியிடப்பட்ட நேரம்: 13:54 (10/11/2014)

கடைசி தொடர்பு:13:54 (10/11/2014)

மூன்று மொழிகளில் ரிலீஸ் ஆகும் 'லிங்கா!'

கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் 'லிங்கா'. அனுஷ்கா, சோனாக்‌ஷி சின்ஹா ஆகிய இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். சந்தானம் , சுந்தர்ராஜன், விஜயகுமார், ராதாரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 'லிங்கா' படத்தின் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளின் இசை வெளியீட்டு உரிமையை ஈராஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கு மொழியில் 'லிங்கா' இசை வெளியீட்டு விழா நவம்பர் 16ல் சென்னையில் நடைபெறுகிறது. இந்தியிலும் 'லிங்கா' இசை வெளியீட்டு விழா  விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈராஸ் நிறுவனமே 'லிங்கா' படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் ரிலீஸ் செய்கிறது. டிசம்பர் மாதம் 'லிங்கா' ரிலீஸ் ஆகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்