வெளியிடப்பட்ட நேரம்: 15:34 (13/11/2014)

கடைசி தொடர்பு:15:34 (13/11/2014)

வில்லன் ஆனார் பிரபுதேவா!

இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் வெளியான படம் ’ஏபிசிடி’ (எனி படி கேன் டான்ஸ்). முழுக்க முழுக்க நடனத்தை மையமாக வைத்து உருவான முதல் 3டி டான்ஸ் படம். 

பிரபு தேவவின் நண்பரும், உதவியாளருமான ரெமோ டி.சௌஸா இயக்கிய இப்படம் அனைத்து தரப்பு மக்களிடமும் பாராட்டுகளை குவித்தது. 

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இப்படத்தில் வருண் தவான்மற்றும் ஷாரதா கபூர் நடிக்க, பிரபுதேவா வில்லனாக நடிக்கிறார். 

முதல் பாகத்தில் நல்லவராக இருந்து இளைஞர்களை வழி நடத்தும் பிரபுதேவா , அடுத்த பாகத்தில் செல்வாக்கு பொருந்திய வில்லனாக, வருணுக்கு பல சிக்கல்களை உருவாக்கும் பாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.  

’ஏபிசிடி-2’ என்ற பெயரில் உருவாகி வரும் இந்தப் படம் அடுத்த வருடம் ஜூன் 26ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்