‘‘நஸ்ரியாவைக் கலாய்க்காதீங்க!’’ - ரீமா கல்லிங்கல் ஆவேசம்!

நதியாவுக்குக் கல்யாணம் ஆகும்போது கவலைப்பட்ட நாம், நஸ்ரியாவுக்குக் கல்யாணம் ஆனபோதும் கவலைப்பட்டோம். திருமணத்திற்கு முன் ஸ்லிம் அண்ட் ஸ்லீக் ஆக வலம் வந்த நஸ்ரியா, இப்போது முகத்தில் எக்ஸ்ட்ரா சதை போட்டு திருவிழா பலூன்போல லேசாக ஊதிவிட்டதுதான் இப்போதைய இணைய கவரேஜ்.

 

சமீபகாலமாக, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எந்தப் படங்களையும் செய்திகளையும் அப்லோட் செய்யாமல் இருந்த நஸ்ரியா, ரசிகர்களின் அன்புத் தொந்தரவால் தனது லேட்டஸ்ட் படம் ஒன்றையும், கணவருடன் ஏர்போர்ட்டில் இருப்பதுபோன்ற ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டதுதான் தாமதம்: ‘குண்டுப் பூசணி’... ‘இனிமேல் நீ என் கனவுக் கன்னி இல்லை’... ‘இந்த ஆன்ட்டியை எனக்குப் பிடிக்கலை’ என்று இணையங்களில் கன்னாபின்னாவென கமென்ட்டுகள் கிளம்ப ஆரம்பித்துவிட்டன. அதனால், இப்போதைக்கு படங்கள் எதையும் அப்லோட் செய்யும் முடிவில் இல்லையாம் நஸ்ரியா.


‘சக நடிகையைக் கிண்டல் செய்வதா?’ என்று இதைக் கண்டு தனது ட்விட்டரில் கொதித்து எழுந்திருக்கிறார் ரீமா கல்லிங்கல். மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த ரீமா தமிழில்  ‘யுவன் யுவதி’ படத்தில் நடித்திருக்கிறார்.‘‘நஸ்ரியா போன்ற ஒரு உற்சாகம் துள்ளும், திறமையான, அழகான பெண்ணை நான் பார்த்ததில்லை. திருமணத்திற்குப் பிறகும் அவர் உற்சாகத் துள்ளலில் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அவர் எப்படி இருக்கிறார் (தோற்றம்) என்பதல்ல; எப்படி இருக்கிறார் (பண்பு) என்பதுதான் விஷயம். நஸ்ரியா... லவ் யூ. அவர் திரும்பவும் திரையுலகில் அழகாக வலம் வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை!’’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில், பாசப் பக்கங்களைப் பறக்க விட்டிருக்கிறார்.

‘‘ஒருவரின் தோற்றம், மதம், நிறம் பற்றி விமர்சிக்க இந்த உலகில் யாருக்கும் தகுதி கிடையாது. இந்த உலகில் அவரவர் போக்கில் செயல்பட அனைவருக்கும் உரிமை இருக்கிறது. அதைத் தட்டிக் கேட்க யாருக்கும் உரிமை கிடையாது.!’’ என்று ஒரு பத்திரிகைப் பேட்டியிலும் கொந்தளித்து விட்டார் ரீமா.

(பூமி உருண்டை ரவுண்டா இருக்கிறதும்; கல்யாணமானா நடிகைங்க குண்டா ஆகுறதும் சகஜம்தானே!)

- தமிழ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!