கத்தி ரீமேக்கில் நடிக்க மறுக்கும் தெலுங்கு நடிகர்கள்? | kaththi, mahesh babu, pawan kalyan, vijay, samantha, a.r.murugadoss, கத்தி, மகேஷ் பாபு, பவன் கல்யாண், சமந்தா, விஜய்,

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (03/12/2014)

கடைசி தொடர்பு:15:30 (03/12/2014)

கத்தி ரீமேக்கில் நடிக்க மறுக்கும் தெலுங்கு நடிகர்கள்?

ஏ.ஆர்முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, சதீஷ், நடித்து வெளியான படம் ‘கத்தி’. படத்திற்கு இசை அனிருத். 

தீபாவளி சிறப்பாக வெளியாகி வசூலை அள்ளியது. இந்நிலையில் படத்தின் இந்தி மற்றும் தெலுங்கு ரீமேக் குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 

இந்தியில் சல்மான், கோவிந்தாவுடன் பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல்கள் வெளியாகின. அடுத்த கட்டமாக இப்போது தெலுங்கின் முன்னணி நடிகர்கள் பவன் கல்யாண் மற்றும் மகேஷ்பாபு ஆகிய இருவரும் படத்தைப் பார்த்துவிட்டு ரீமேக் செய்ய மறுத்துவிட்டனர்.

'' எனக்கு உண்மையில் ‘கத்தி’ படம் மிகவும் பிடித்திருக்கிறது. எனினும், நான் ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என்ற குறிக்கோளுடன் இருக்கிறேன்''  என மகேஷ்பாபு கூறியுள்ளார். 

இப்போது ‘கத்தி’ தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வேறு நடிகர்களைத் தேடி வருகிறார்களாம்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close