தெலுங்கு சினிமா ஹீரோக்களின் ஃப்ரெண்ட்ஷிப் ரகசியம்! - அல்லு சிரிஷ் | தெலுங்கு சினிமா ஹீரோக்களின் ஃப்ரெண்ட்ஷிப் ரகசியம்! - அல்லுசிரிஷ் கல கல! , அல்லு சிரிஷ்,

வெளியிடப்பட்ட நேரம்: 15:02 (10/12/2014)

கடைசி தொடர்பு:15:02 (10/12/2014)

தெலுங்கு சினிமா ஹீரோக்களின் ஃப்ரெண்ட்ஷிப் ரகசியம்! - அல்லு சிரிஷ்

அக்கட பூமியின் மெகா குடும்பத்தின் வாரிசு ஹீரோ அல்லு சிரிஷ்.  ராதாமோகன் இயக்கிய கௌரவம் படத்தின் மூலம்  கோலிவுட் , டோலிவுட்டில் ஒரே சமயத்தில் ஹீரோ ஆனவர். ஆக்ஷன் ஹீரோ அல்லு அர்ஜூன் தம்பி . ஆனால், இதற்கான எந்த அடையாளத்தையும் காட்டிக்கொள்ளாமல் அடக்கமாகவே பேசுகிறார் சிரிஷ்.‘‘பொதுவா உங்க குடும்பத்துல இருந்து சினிமாவுக்கு வர்றது புதுசு இல்லை. ஆனா, நீங்க எந்த தருணத்துல நடிகன் ஆகணும்னு முடிவெடுத்தீங்க?’’
‘‘ நான் சைல்ட் ஆர்டிஸ்ட்டா மூணு படங்கள்ல நடிச்சிருக்கேன். அப்பவே நடிக்கணும்னு நிறைய ஆசை இருந்தது. ஹீரோன்னு மட்டும் ஃபிக்ஸ் பண்ணிக்காம  தொடர்ந்து நடிக்கலாம்னு பல முறை யோசிச்சிருக்கேன். அந்த அளவுக்கு  எனக்கு நடிப்புப் பிடிக்கும். எப்படி ஹீரோவாகுறது ? படத்தை எப்படித் தாங்கிப்பிடிக்குறது? படம் முழுக்க எப்படி பொறுப்பா இருக்குறதுன்னு சிரஞ்சீவி மாமாவைப் பார்த்துதான் கத்துக்கிட்டேன்.  சினிமாவுல ஹீரோவா நடிக்குறது பெரிய பொறுப்பு.  சினிமா பிடிக்கும்ங்கிறதால அப்பாகூட சேர்ந்து  புரொடக்ஷன் வேலைகளையும்  பார்த்தேன். போகப் போக  நிறைய கேரக்டர்கள்ல நடிக்க வாய்ப்புகள் வந்தன. ஆனா, நான் வேணாம்னு ரிஜக்ட் பண்ணேன். அப்புறம் அந்த படங்களைப் பார்த்ததும் நான் நடிச்சிருந்தா இன்னும் நல்லா பண்ணியிருக்கலாமேன்னு தோணுச்சு. இண்டஸ்ட்ரியில இருக்குற பெரிய வி.ஐ.பிகள் எல்லாம் நீங்க ஏன் தம்பி நடிக்காம இருக்கீங்க? நடிக்க வாங்கன்னு நம்பிக்கை கொடுத்தாங்க. இன்னும் சிலர், 'என் படத்துல நடிங்க'ன்னு சொன்னாங்க. இவ்ளோ பேர் சொல்றாங்களே. நடிச்சுதான் பார்ப்போம்னு நடிப்பு, டான்ஸ், ஃபைட்னு எல்லாத்தையும் முறையா கத்துக்கிட்டு நடிக்க வந்துட்டேன். இதான் நான் நடிகன் ஆன கதை! ’’

‘‘ 'கௌரவம்', 'கொத்தஜன்டா' படங்களுக்கு எதிர்பார்த்த ரெஸ்பான்ஸ் கிடைக்கலையே. அதுக்காக வருத்தப்படுறீங்களா?’’
‘‘ அர்ஜூன் கேரக்டர் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஏன்னா,  ரியல் கேரக்டர்ல என்கூட ரிலேட் பண்ணிக்கலாம். நான் கொஞ்சம் சைலன்ட் டைப். கம்மியாதான் பேசுவேன். நிறைய யோசிப்பேன். படம் சரியா ரீச் ஆகலைன்னாலும் இப்படி ஒரு படத்துல அறிமுகம் ஆனதுக்காக பெருமைப்படறேன்’’.

‘‘சிரஞ்சீவி மாமா என்ன சொல்றார்? ’’
‘‘ நான் சிரஞ்சீவி மாமாவோட ரசிகன். அவர் படங்கள்னா அப்படி விரும்பிப் பார்ப்பேன். மாமாங்கிற உறவை விட அவரோட ரசிகன்னு சொல்றதுலதான் எனக்கு சந்தோஷம். நான் நடிக்கலாம்னு இருக்கேன் மாமான்னு அவர் முன்னாடி போய் நின்னேன். ‘ எதுவா இருந்தாலும் இங்கே கஷ்டப்பட்டுதான் ஆகணும். எதுவுமே இங்கே ஈஸியா  கிடைக்காது. ஹீரோவாகும்போது உனக்குன்னு ஆடியன்ஸ் கிடைப்பாங்க. அவங்க உங்கிட்ட நிறைய எதிர்பார்ப்பாங்க.  அதை நீதான் நிறைவேத்தணும். அதுக்காக இந்த ஃபேமிலியில இருந்து  வந்திருக்கோம். பெருசா பண்ணனும்னு பிரஷரை ஏத்திக்காதே.  ஸ்டெப் பை ஸ்டெப்பா பண்ணு.  எந்தப் படத்துக்குக் கதை கேட்டாலும் என்கிட்ட ஒரு முறை சொல்லு. படம் முடிஞ்சதும் ரஷ்ஷஸ் போட்டுக் காட்டு’ன்னு சொன்னார். இப்பவும் எப்பவும் என்னோட வெல்விஷர் சிரஞ்சீவி மாமாதான் ’’. ‘‘ சிரஞ்சீவி, ராம்சரண், அல்லு அர்ஜூன்னு உங்க குடும்பத்துலயே நிறைய ஹீரோக்கள் இருக்காங்களே? உண்மையை சொல்லுங்க. யார் கூட போட்டி போடப்போறீங்க?’’
‘‘ யாரும் யாருக்கும் போட்டி இல்லை.  இப்பவும் 15 ஹீரோக்கள் ஃபீல்டுல  கமர்ஷியல் ஹிட்டடிச்சுட்டு இருக்காங்க. எனக்குன்னு ஒரு ஸ்பேஸ் இருக்கும். எல்லார் மாதிரியும் நானும் ஆக்ஷன்ல இறங்குனா நல்லா இருக்குமா?  ஆக்ஷன் நல்லா வருது. பாண்டியன் மாஸ்டர் கிட்ட சிலம்பாட்டம் முதல் நிறைய ஃபைட் கத்துக்கிட்டேன். நான் ஆக்ஷனுக்கு சரியாத்தான் இருப்பேன். ஆனா இப்போதைக்கு வேணாம்னு நெனைக்குறேன்.  போட்டியே இல்லாத இன்னொரு புது ரூட்ல பயணிக்கலாம்னு இருக்கேன். அது என்ன ரூட்னு தெரிஞ்சுக்கணும்னா வெய்ட் அண்ட் ஸீ ! ’’
 
 ‘‘ இந்தி கஜினியில புரொடக்ஷன் வேலை பார்த்தீங்க. அதெல்லாம் தயாரிப்பாளர் ஆகுறதுக்கான முன்னோட்டமா?’’
‘‘ அது அப்பாவுக்காக. மும்பையில மாஸ்கம்யூனிகேஷன் படிச்சுக்கிட்டு இருந்த சமயம் அது. அப்பா ‘தயாரிப்பாளர் வேலைகளை இந்த ஒரு படத்துல மட்டும் செய். அப்புறம் உனக்குப் பிடிச்சதை செய்’னு சொன்னாரு. ஆனா, அப்போ ஆர்வத்துல செய்யலை. நம்ம கம்பெனி நாமதான் பண்ணனும்னு இருந்தேன். ஷூட்டிங் ஸ்பாட்ல  அமீர் கான் சாரைப் பார்த்ததும் ஆக்டிங்ல  சில விஷயங்களைக் கத்துக்கிட்டேன். அமீர் கானோட வொர்க்கிங் ஸ்டைலும், தொழில் பக்தியும்  என்னை ரொம்பவே ஆச்சர்யப்படுத்துச்சு. அசிஸ்டன்ட் டைரக்டர் கரெக்ஷன் சொன்னாலும், 'இப்படி பண்ணலாமே சார்'னு ஆலோசனை சொன்னாலும்  மறுக்காம ஏத்துப்பார். அதையெல்லாம் ஆர்வத்தோட பார்த்துக்கிட்டு இருந்தேன். இதைக் கவனிச்ச  முருகதாஸ் சார் ‘ நீங்க ஹீரோவா நடிக்கலாமே தம்பி. தயங்காம நடிங்க!’ன்னு சொன்னார்.  நான் நடிக்க முருகதாஸ் சாரும் ஒரு காரணம்.’’

‘‘ உங்களுக்குப் பிடிச்ச தமிழ் சினிமாக்கள் என்னென்ன?’’
‘‘ இயக்குநர்கள்ல முருகதாஸ்,  கேவி ஆனந்த் , வெங்கட்பிரபு, எம். ராஜேஷைப் பிடிக்கும்.  துப்பாக்கி, அயன் , கோ, பாஸ் என்கிற பாஸ்கரன், மங்காத்தா படங்களைத் திரும்பத் திரும்பப் பார்த்திருக்கேன். நடிகர்கள்ல கமல், விக்ரம், சூர்யாவைப் பிடிக்கும். ’’ ‘‘ அதெப்படி தெலுங்கு சினிமாவுல மட்டும்  போட்டி இருந்தும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஷிப்ல இருக்கீங்க.?’’
‘‘ ரொம்ப சிம்பிள். நாங்க எல்லாம் ஒரே ஃபேமிலி மாதிரிதான் பழகுவோம். படம் ரிலீஸ் ஆகுற  வெள்ளிக்கிழமை யாரோட படம்  பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆகுதுன்னு பார்ப்போம். ஹிட்டாகுற ஹீரோவுக்கு வாழ்த்து சொல்லிட்டு அடுத்தது என்னன்னு யோசிப்போம்.  கல்யாணம், பிறந்த நாள்னு எந்த ஃபங்ஷன் நடந்தாலும் மறக்காம அட்டனென்ஸ் போட்டுடுவோம். ராணா, கோபிசந்த், நானி, ரவிதேஜா, ஜூனியர் என்.டி.ஆர், பிரபாஸ், பவன் சார்னு எல்லார் கூடவும் டச்ல இருக்கேன். ஏதாவது சின்ன விஷயம் இருந்தாலும் போன்ல ஷேர் பண்ணிக்குவோம். என்ன நடக்குதுன்னு சாட் பண்ணுவோம்.  சின்ன வயசுல இருந்தே சேர்ந்து வளர்ந்தோம். அந்த நட்பை இப்பவும் வளர்த்துக்கிட்டு இருக்கோம்’’

‘‘ அல்லு அர்ஜூன் நடிக்க டிப்ஸ் கொடுத்தாரா?’’
‘‘ நான்தான் அண்ணன் நடிச்ச படங்களை ஒண்ணுவிடாம விமர்சனம் பண்ணுவேன்.  ப்ளஸ் , மைனஸை புட்டு புட்டு சொன்னதும் அண்ணன் அன்பா கேட்டுப்பார். நான் ஓப்பன் டைப்பா இருக்குறதுதான் அண்ணனுக்குப் பிடிக்கும். எந்தப் படம் வந்தாலும் என் விமர்சனம் கேட்காம இருக்க மாட்டார். ‘நீ ஹீரோ ஆகிட்டே. ஆனாகும்,  அப்படியே இரு. மாறாதே. நீ இப்படி இருக்குறதுதான் பிடிச்சிருக்கு’ன்னு சொன்னார். அதான் அர்ஜூன்! ’’

‘‘ எந்த ஹீரோயினோட டூயட் ஆடிப்பாட ஆசை?’’
‘‘ இவங்க தான் ஹீரோயினா நடிக்கணும்னு யாரையும் மைண்ட்ல ஃபிக்ஸ் பண்ணிக்கவே மாட்டேன். ஆனா, சில ஹீரோயின்களை ரொம்பப் பிடிக்கும். காஜல், தமன்னா, தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா அதுல டாப் லிஸ்ட்ல இருக்காங்க.

‘‘ எப்போ கல்யாணம்?’’
‘‘ இப்போதான் ஃபீல்டுக்கு வந்திருக்கேன். கண்டிப்பா லவ் மேரேஜ் தான். ஆனா நாலு வருஷம் கழிச்சுதான்.’’


 நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்