''முயல்களைக் கொல்லாதீங்க!'' - இலியானா

PETA - என்றால் People for ethical treatment of animals.

இது விலங்குகள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கப் போராடும் அமைப்பு. இந்த அமைப்பின் சார்பில் ‘விலங்குகளைத் துன்புறுத்தாதீர்கள்; சர்க்கஸுக்கு விலங்குகளைப் பயன்படுத்தாதீர்கள்’ என்று ஹேமமாலினி முதல் தமன்னா வரை தூது போய் விட்டார்கள்.

PETA-வின் லேட்டஸ்ட் கெஸ்ட் - நம்ம இடுப்பழகி இலியானா. கெஸ்ட் என்றால் சாதாரண கெஸ்ட் இல்லை - நிர்வாண கெஸ்ட்! சமீபத்தில் இந்த அமைப்புக்காக அரை நிர்வாண போஸ் கொடுத்து வாய் பிளக்க வைத்துவிட்டார் இலியானா. ஆனால், அரை நிர்வாணத்துக்கு ஒரு நியாயமான(!) காரணம் உண்டு.அங்கோரா ரோமம் என்பது ஒரு வகை முயல் மற்றும் பூனை வகைகளைச் சேர்ந்த ரோமம். இதிலிருந்துதான் ஸ்வெட்டர், கம்பளி, ஸ்கார்ஃப் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துத்தான், பீட்டா அமைப்பு செப்டம்பர் மாதம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் நிர்வாண போஸ் கொடுத்திருந்தார் இலியானா. புகைப்படத்தின் பின்புறம், ‘அங்கோரா ரோமம் மற்றும் தோல் இவற்றுக்கு நோ சொல்வோம்!’ என்று எழுதப்பட்டிருந்தது.நிகழ்ச்சிக்கு வந்த இலியானா, தனது முன்புறம், ‘ஃபர்’ என்று எழுதி அடிக்கப்பட்டிருந்த (அதாவது, விலங்குகளின் தோல் வேண்டாம்!) டி-ஷர்ட்டை அணிந்து தனது எதிர்ப்பைத் தெரிவித்தபடிபேசிய இலியானா, ‘‘விலங்குகளில் முயல்கள் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவற்றின் துறுதுறு குணமும், அழகான உடலமைப்பும் என்னை மிகவும் கவர்ந்தவை. ஆனால், சிலர் அங்கோரா முயல்களை உயிருடன் இருக்கும்போதே கொடுமைப்படுத்துகிறார்கள். அவற்றின் ரோமங்களைப் பிடுங்கி ஸ்வெட்டர், ஸ்கார்ஃப் தயாரிக்கப் பயன்படுத்துகிறார்கள். இது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. முயல்கள் மட்டுமில்லை; விலங்குகளின் தோலினால் செய்யப்பட்ட எந்தப் பொருளுக்கும் தடா சொல்வோம்!’’ என்று பொதுமக்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

இலியானா சொன்னா இடிஅமீனே சொன்ன மாதிரி!

- தமிழ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!