ஆறு கிலோ எடை குறைத்த தமன்னா! | தமன்னா, பாகுபாலி, பிரபாஸ், ராஜமௌலி, தெலுங்கு, அனுஷ்கா, tamanna, bahubali, prabhas, rajamouli, telugu, anushka,

வெளியிடப்பட்ட நேரம்: 17:18 (23/12/2014)

கடைசி தொடர்பு:17:18 (23/12/2014)

ஆறு கிலோ எடை குறைத்த தமன்னா!

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா , தமன்னா, ராணா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பாகுபலி’.

மன்னர் காலத்து கதையாக உருவாகி வரும் இப்படத்துக்கு தெலுங்கு மட்டுமல்லாமல் தமிழ் மொழியிலும் எதிர்பார்ப்புகள் வலுத்து வருகின்றன. தமிழ் வசனங்களை மதன் கார்க்கி எழுதுகிறார். கீரவாணி இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தமன்னா தேவதை போல் காட்சி கொடுக்கும் ஒரு புகைப்படம் வெளியானது.

'பாகுபலி' படத்துக்காக தமன்னாவின் பாத்திரத்திற்கு அவர் ஆறு கிலோ எடை குறைக்க வேண்டும் என ராஜமௌலி தமன்னாவிடம் சொன்னாராம்.

அதற்கு சம்மதித்த தமன்னா கடுமையான டயட் மூலம் இப்போது குறுகிய காலத்தில் ஆறு கிலோ எடையைக் குறைத்தாராம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்