வெளியிடப்பட்ட நேரம்: 13:33 (26/12/2014)

கடைசி தொடர்பு:13:33 (26/12/2014)

மகேஷ்பாபு ,ஸ்ருதிஹாசன் எடுக்கப்போகும் மிகப்பெரிய ரிஸ்க்!

கொரட்டாலா சிவா இயக்கத்தில் மகேஷ் பாபு , ஸ்ருதிஹாசன் நடிக்கும் படம் ‘ஸ்ரீமந்துடு’. இப்படத்தின் படப்பிடிப்புகள் தென்காசி, காரைக்குடி , மற்றும் தென்னாப்பிரிக்க பகுதிகளில் படமாக்கப்பட உள்ளது. 

படத்திற்கு இசை தேவி ஸ்ரீபிரசாத். படத்தின் வில்லனாக ஜெகபதி பாபு நடிக்க உள்ளார். இந்த படக்குழு அடுத்து தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு பயணமாவதுதான் மிகப்பெரும் ரிஸ்க்.

தென்னாப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் நோய் அதிக அளவில் பரவி வருகிறது.உயிர்கொல்லியான எபோலா காரணமாக ஹாலிவுட் உள்ளிட்ட எந்த படங்களின் படப்பிடிப்புகளும் சமீப காலமாக அங்கு நடைபெறுவதில்லை. 

இந்நிலையில் தற்போது மகேஷ் பாபு மற்றும் ஸ்ருதி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளது உயிரையே பணயம் வைக்கும் அளவிற்கு ரிஸ்கானது. இவர்கள் எப்படி இதற்கு ஒப்புகொண்டார்கள் என இருவரையும் தெலுங்கு சினிமா உலகம் பாராட்டி வருகிறது. . 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்