வெளியிடப்பட்ட நேரம்: 12:24 (03/01/2015)

கடைசி தொடர்பு:12:24 (03/01/2015)

ட்விட்டரில் கலக்கும் பவன் கல்யாண்!

நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும், தெலுங்கு திரையுலகின் டாப் ஹீரோவும் ஆன ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண். இந்திய திரையுலகின் நடிகர், இயக்குநர், எழுத்தாளர், பாடகர் மற்றும் அரசியல்வாதி என்று பல்முனைகளில் செயல்பட்டுவருபவர். இவர் தன்னுடைய டிவிட்டர் கணக்கை 2015 புத்தாண்டு 1ம் தேதி தொடங்கினார். இரண்டு நாட்களில் மட்டும் ஒரு லட்சத்து 14 ஆயிரம் பாலோயர்கள் இவரை பின் தொடர்கின்றனர். இவர் கணக்கை தொடங்கிய முதல் 24 மணிநேரத்தில் 90, 000 பாலோயர்கள், அதுவும் அவரின் ஒரு டிவிட்க்கு மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய ரசிகர்களுக்காக புத்தாண்டு வாழ்த்தினை தெரிவித்து முதல் டிவிட் போஸ்ட் செய்தார் பவன். அந்த முதல் டிவிட்டினை மட்டும் 14000 பேர் ரிட்வீட் செய்திருக்கின்றனர். மேலும் 19,000 பேர் ஃபேவரைட் செய்திருக்கின்றனர். கணக்கு தொடங்கிய சில மணிநேரங்களிலேயே வெரிஃபைட் பக்கமாகவும் மாற்றியுள்ளார் பவன்.

தென்னிந்திய நடிகர்களில் ஆரம்பித்து இரு தினங்களில் இவ்வளவு சீக்கிரம் 1 லட்சத்தை தாண்டியவர் பவன் கல்யாணாகத்தான் இருப்பார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்