என்னை அறிந்தால் டிரெய்லர் குறித்து பிரபலங்களின் கருத்துக்கள்! | ennai arinthaal , என்னை அறிந்தால், அஜித் அருண்விஜய் சமந்தா த்ரிஷா கவுதம் மேனன் ajithkumar arunvijay samantha trisha

வெளியிடப்பட்ட நேரம்: 15:24 (03/01/2015)

கடைசி தொடர்பு:15:24 (03/01/2015)

என்னை அறிந்தால் டிரெய்லர் குறித்து பிரபலங்களின் கருத்துக்கள்!

அஜித் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு ’என்னை அறிந்தால்’ படம். அஜித், அருண் விஜய், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கியிருக்கும் ’என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் “டீஸர்” வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதைத் தொடர்ந்து புத்தாண்டு அன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.

இதுவரை இரண்டு மில்லியன் ரசிகர்கள் ’என்னை அறிந்தால்’ டிரெய்லரைப் பார்த்து ரசித்திருக்கின்றனர். பல சினிமா பிரபலங்களும் தன்னுடைய டிவிட்டர் பக்கங்களில் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

“என்ன ரெடியா” என்று டிரெய்லரில் அஜித் பேசும் வசனம் தான் தற்போதைக்கு வைரலாகி வருகிறது. விக்ரம் பிரபு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “படத்திற்கு காத்திருப்பதாகவும், “என்ன ரெடியா” என்று வசனத்துடனும் ட்வீட் செய்துள்ளார்.

தற்போது ட்விட்டரில் சமந்தா “ நான் சூப்பர் லேட் தான், இப்போ தான் டிரைலர் பார்த்தேன், அமேசிங்” என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

வெங்கட் பிரபு, சிம்பு, ப்ரேம் ஜி அமரன் மற்றும் லட்சுமிராய் போன்ற பல பிரபலங்களும் தன்னுடைய டிவிட்டரில் “தல”,“மாஸ்”, “வார்த்தையே இல்ல” என்று “என்னை அறிந்தால்” படத்திற்கு பாராட்டு மழையை அள்ளி தெளித்து வருகின்றனர்.

ரசிகர்கள் காத்திருக்கும் ’என்னை அறிந்தால்’ ஜனவரி 29 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்