காது கேளாதவராக நடிக்கும் நயன்தாரா! | nayantara, naanum rawdithaan , vijay sethupathi, dhanush, நானும் ரவுடிதான், நயன்தாரா

வெளியிடப்பட்ட நேரம்: 15:14 (06/01/2015)

கடைசி தொடர்பு:15:14 (06/01/2015)

காது கேளாதவராக நடிக்கும் நயன்தாரா!

முன்னனி நடிகைகளில் டாப் இடம் பிடித்த நயன்தாரா ‘ராஜா ராணி’ படத்திலிருந்து தன்னுடைய இரண்டாவது எண்ட்ரியை சரியாக பயன்படுத்தி வருகிறார்.

அதற்காக சவாலான வேடங்களில் தன்னுடைய நடிப்பின் உச்சத்தினை வெளிப்படுத்தியும் வருகிறார். தனுஷ் தயாரிப்பில், ’போடா போடி’ இயக்குநர் விக்னேஷ் சிவா இயக்கவிருக்கும் இரண்டாவது படம், “நானும் ரவுடிதான்”.விஜய் சேதுபதி , நயன் நடித்து வரும் இப்ப்டத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிந்துவிட்டன.

இந்த படத்தில் நயன்தாரா காது கேளாதவராக  நடிக்கவிருக்கிறார். காது கேளாதவர் என்றாலும் படத்தில் நயனின் பாத்திரம் கருணை அடிப்படையிலோ அல்லது சிம்பதி அடிப்படையிலோ இல்லாமல், ஜாலியாகவும், நகைச்சுவையாகவும் உருவாக்கியிருக்கிறாராம் இயக்குநர் விக்னேஷ் சிவா. 

சமீபகாலமாக நயன்தாரா ‘நீ எங்கே என் அன்பே’ படத்தில் ஹர்ஷவர்தன் ரானே, அடுத்து ‘நெடுஞ்சாலை’ நாயகன் ஆரியுடன் ‘மாயா’, அடுத்து விஜய் சேதுபதியுடன் ‘நானும் ரவுடிதான்’ என டாப் ஹீரோக்கள் படங்களாக இல்லாமல் இரண்டாம் தர நடிகர்களுடன் அதிகம் நடிக்க துவங்கியுள்ளார். 

இதற்கு ஒரே காரணம் இது போன்ற படங்களில் தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்பதுதான். இந்த படத்திற்கு இசை அனிருத். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்