அனுஷ்காவிற்கு சிலை! | அனுஷ்கா, நயன்தாரா, பாபி சிம்ஹா, சூது கவ்வும், anushka, Nayanthara, bobby simha, anushka shetty

வெளியிடப்பட்ட நேரம்: 18:08 (06/01/2015)

கடைசி தொடர்பு:18:08 (06/01/2015)

அனுஷ்காவிற்கு சிலை!

“இதுதாண்டா போலீஸ்” புகழ் தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகர் கேங்ஸ்டர் ஸ்டோரியில் நடிக்கிறார். விஜய் சேதுபதி நடித்து தமிழில் மெகா ஹிட் அடித்த “சூது கவ்வும்” படம் தான் “கட்டம் கேங்”  என தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது.

விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில், டாக்டர் ராஜசேகர் நடிக்கிறார். தமிழில் பாபி சிம்ஹா நயன்தாராவின் தீவிரமான ரசிகராக அவருக்கு சிலை வைப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.

அதே காட்சியை தெலுங்கில் அனுஷ்காவிற்கு சிலை வைப்பது போன்று காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. அனுஷ்காவின் அனுமதியுடனே அவருக்கு சிலை வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.படத்தை இயக்குகிறார் அச்சு.

இதே படம் இந்திக்கும் செல்லவிருக்கிறது. இந்தியில் ஐஸ்வர்யா ராய்க்கு சிலைவைப்பது போல காட்சி வைக்க அப்படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close