தொழில் அதிபரை மணக்கிறார் த்ரிஷா!

இம்மாதம் 23-ம் தேதி தனக்கும் வருண் மணியனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக நடிகை த்ரிஷா அறிவித்துள்ளார்.

’மெளனம் பேசியதே’ படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமாகி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, 15 வருடமாக நடிப்பில் தனக்கென தனி இடத்தினை இன்னும் தக்கவைத்து முன்னணி நடிகையாக கோடம்பாக்கத்தில் வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நம்பர் 1 ஹீரோயினியாக இருந்தவர்.

ஆரம்பத்தில் தெலுங்கு நடிகர் ராணாவும் த்ரிஷாவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் நடைபெறப்போவதாகவும் தகவல்கள் கசிந்தன. பின்னர் தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளர் வருண் மணியனுடன் தாஜ்மஹால் சுற்றுப் பயணம் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

இறுதியாக, த்ரிஷா, வருண் மணியன் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதி பற்றிய பல்வேறு தகவல்கள் இணையத்தில் வலம் வந்தபடி இருந்தன. இது குறித்து இரு தரப்பில் இருந்தும் எந்தொரு தகவலையும் உறுதி செய்யவில்லை.மேலும் திருமணம் என்றால் முதல் அறிவிப்பு என்னிடம் இருந்துதான் வரும் என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பது குறித்து த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார். "ஜனவரி 23-ம் தேதி வருண்மணியனுடன் நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது. நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் நிச்சயம் நட உள்ளது என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

'திருமண தேதி குறித்து நிறைய செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், இன்னும் திருமண தேதி முடிவாகவில்லை. திருமண தேதி முடிவான உடன் நானே அதிகாரபூர்வமாக அறிவிக்கிறேன்.

நடிப்பை கைவிடுவது பற்றி எந்தொரு எண்ணமும் இல்லை. இன்னும் 2 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாக உள்ளேன். 2015-ம் ஆண்டில் நான் நடித்து 4 படங்கள் வெளியாக இருக்கின்றன" என்று த்ரிஷா தெரிவித்திருக்கிறார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!