”டார்லிங்” பட முன்னோட்டம்! | darling, gvprakash, டார்லிங், பிரகாஷ்

வெளியிடப்பட்ட நேரம்: 13:31 (14/01/2015)

கடைசி தொடர்பு:13:31 (14/01/2015)

”டார்லிங்” பட முன்னோட்டம்!

‘டார்லிங்’. தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பிரேம கதா சித்ரம்’ படத்தின் ரீமேக். பொங்கல் ரேசில் திடீரென குதித்த படம். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது ஜி.வி.பிரகாஷ் பேசும்போது ''என் தாடியை பார்த்துதான் இப்பட வாய்ப்பு வந்தது என கூறியுள்ளார். அவர் பேசுகையில், 'பென்சில்' படம் 3 மாதங்களாக படப்பிடிப்பு இல்லாததால் சலித்து தாடி விட்டிருந்தேன். என் தாடியைப் பார்த்து இப்பட வாய்ப்பு வந்தது' என பதிவு செய்தார்.நிக்கி கல்ராணி, ஸ்ருஷ்டி நடிக்கும் இப்படத்தில் நிக்கி பேயாக மிரட்ட இருக்கிறார். ‘டார்லிங்' ட்ரெய்லரை பார்த்து வாழ்த்தி ஏ.ஆர்.ரகுமான் ட்வீட் செய்ததில் இந்திய அளவில் ட்ரண்டில் முன்னணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், படத்தில் ராஜேந்திரனிடம் பேய் ‘ஐயம் கம்மிங் ஃபார் யூ’ என கூற ‘ஐயம் வெயிட்டிங்’ என ‘துப்பாக்கி’ விஜய் டயலாக்குடன் பதில் சொல்ல என இப்போதே டி.வி.க்களில் ’ஐ’, ‘ஆம்பள’  பட ப்ரமோஷன்களை காட்டிலும் பட்டையை கிளப்பி வருகிறது.

சாம் ஆண்டன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக அறிமுகமாக உள்ள படம் வசூலிலும் மை ‘டார்லிங்’ என சொல்ல வைக்குமா என பொருத்திருந்து பார்ப்போம்.இந்த பொங்கலுக்கு ஆறேழு படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்த்து, மூன்று படங்களாக குறைந்துள்ளது. இந்த மூன்றில் பொங்கல் விருந்து படைக்கப் போவது எந்த படம் என்பது இதோ இன்னும் இரு தினங்களில் தெரிந்துவிடும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்