’மெசஞ்சர் ஆஃப் காட்’ படத்திற்கு வலுக்கும் எதிர்ப்புகள்!

“மெசஞ்சர் ஆஃப் காட்” என்ற படத்தினை வெளியிடுவதற்கு ஹரியாணா மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. “ தேரா சச்சா செளதா” என்ற ஆன்மீக இயக்கத்தின் தலைவர் “குர்மீட் ராம் ரஹீம் சிங்” தனே நடித்து இயக்கிய படம் “ மெசஞ்சர் ஆஃப் காட்” அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் ஏழு பாடல்கள் எழுதி, தயாரிக்கவும் செய்திருக்கிறார். இப்படத்தினை எதிர்த்து சீக்கிய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

ராம் ரஹீம் சிங் சீக்கியர்களின் குருவான குரு கோவிந்த் சிங் போல உடை அணிந்து சீக்கியர்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்தியதாக இந்த அமைப்பு புகார் எழுப்பியுள்ளது. 

பஞ்சாபின் பதிண்டா பகுதிகளில் ராம் ரஹீம் சிங் ஆதரவாளர்கள் அதிகமாக இருப்பதால், 13 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தேரா சச்சா அமைப்பின் ஆதரவாளர்கள் 15ஆயிரம் பேர் பிரத்யோகக் காட்சியைக் காண்பதற்காக ஹரியாணாவின் குர்கான் நகருக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றனர். அவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளனர்.

பல அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் எதிர்க்கும் இந்த படத்திற்கு சென்சார் தரப்பில் எப்படி அனுமதி வழங்கினர், வேறு ஏதும் தவறுகள் நடந்திருக்கிறதா என்று கேள்விகளை முன்வைக்கின்றனர். அதனால் இந்த பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!