ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகும் ’கயல்’ ஆனந்தி! | கயல், ஆனந்தி, ஜி.வி.பிரகாஷ்

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (19/01/2015)

கடைசி தொடர்பு:15:20 (19/01/2015)

ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாகும் ’கயல்’ ஆனந்தி!

டார்லிங் வெற்றியைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் அடுத்தப் படம் ’ த்ரிஷா இல்லன்ன நயன்தாரா’. ’கயல்’ படத்தின் நாயகி ஆனந்தி ஜோடியாக நடிக்கிறார். கேமியோ ஃபிலிம் நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் தயாரிக்கும் இப்படம் பூஜையுடன் தொடங்கியது. வருகிற 22ஆம் தேதி படபிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.

பல்வேறு இயக்குநரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்த ஆதிக் ரவிசந்திரன், இப்படத்தின் இயக்குநராக அறிமுகமாகிறார்.

’அங்காடித் தெரு’, ’கோ’, போன்ற வெற்றிப் படங்களின் ஒளிபதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் இப்படத்தின் ஒளிபதிவாளராக பணியாற்றவுள்ளார். ரூபன் படத்தொகுப்பில், ஹேரிப் நடனம் அமைக்க, ஜி.வி.பிரகாஷ் இசையில் விரைவில் திரைக்கு வர இருக்கிறது “த்ரிஷா இல்லன்னா நயன்தாரா”.

 இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஜெயகுமார் பேசும்போது, குறுகிய கால தயாரிப்பில் விரைவில் வரவிருக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெறும். மேலும் ஜி.வி.யின் டார்லிங் வெற்றிப் பெற்றது இப்படத்தின் வெற்றியை மேலும் அதிகரிக்கும். வித்தியாசமான பரிமாணத்தில் இப்படம் அமையும் என கூறுகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்