காவலன் பட நடிகைக்கு கல்யாணம்!

விஜய் நடிப்பில் வெளியான “காவலன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறியப்பட்ட நடிகை மித்ரா குரியன். அப்படத்திற்க்கான சிறந்த துணை நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதினைப் பெற்றார். கடந்த சில நாட்களுக்கு முன் இவருக்கும், கிபோர்டு இசை கலைஞர் வில்லியம் ஃப்ரான்சிஸ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

அமெரிக்காவில் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்ட இருவரும் நட்புடன் பழகி இறுதியில் காதலில் முடிந்திருக்கிறது. பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் எந்த வித ஆடம்பரமும் இல்லாமல் சில குறிப்பிட்ட நண்பர்களுடன் எளிமையாக தங்களது நிச்சயதார்த்ததினை முடித்திருக்கிறார்கள்.

இருவருமே கேரளாவைச் சேர்ந்தவர்கள். வில்லியம் மலையாள படங்களில் கிபோர்டு ஆர்டிஸ்ட். மேலும் பல நிகழ்ச்சிகளில் இசையமைப்பவர். மித்ரா தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழில் “கந்தா”, “நந்தனம்” மற்றும் “ஆதர்” போன்ற படங்களும் மித்ரா நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!