”‘தல’ தன் தலையாலயே கண்ணாடியை உடைத்தார்” சில்வா

வெளியிடப்பட்ட நேரம்: 18:16 (20/01/2015)

கடைசி தொடர்பு:18:16 (20/01/2015)

”‘தல’ தன் தலையாலயே கண்ணாடியை உடைத்தார்” சில்வா

சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் ‘என்னை அறிந்தால்’ டிரெய்லரையே ரசிகர்கள் வைரலாக்கி டிரெண்ட் செட் செய்தார்கள். அந்த அளவிற்கு பரபரப்புடன் எதிர்பார்க்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்து வருபவர் “ ஸ்டண்ட் சில்வா”.

மங்காத்தா, வீரம் என அஜித்துடன் மூன்றாவது ‘என்னைஅறிந்தால்’ படத்துக்கும் இவரே சண்டை பயிற்சி. மேலும் இப்படத்தில் ஒரு குட்டி ரோலும் இருக்கிறதாம் இவருக்கு. அப்படி என்ன தான் இருவருக்கும் கெமிஸ்ட்ரி? சில்வாவே சொல்லுகிறார்

“ வெங்கட் பிரபு தான் ‘மங்காத்தா’ படத்தில் அஜித்தினை அறிமுகப்படுத்தினார். ‘மங்காத்தா’ பட சண்டைகாட்சிகள் பெரிதாக பேசப்பட என்னை பிடித்துப் போய்விட்டது. சிவா சாருடன் முன்னரே பணியாற்றியதால் வீரம் படத்திலும், கொளதம் சாருடனும் விண்ணைத்தாண்டி வருவாயா, நடுநிசி நாய்கள் படத்திலும் பணியாற்றியதால், ‘என்னைஅறிந்தால்’ படத்தில் இயற்கையாகவே அஜித்துடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. என்கிறார் சண்டை சில்வா.

‘என்னை அறிந்தால்’ படத்தில் எல்லா சண்டைக் காட்சிகளும் லைவாகவே இருக்கும். அவர் ரிஸ்க் எடுத்து நமக்கு பீதியை கிளப்புவார். ஒரு சீனுக்கு ‘தல’ தன் தலையாலயே கண்ணாடியை உடைப்பார். அது நிஜமாகவே மாஸ். அஜித் சார் எல்லார் மேலயும் அக்கறையாகவே இருப்பார். சின்னதா தப்பு பண்ணா கூட வயசு வித்யாசம் பார்க்காம மன்னிப்பு கேட்பார். சாரி மற்றும் தேங்க்ஸ் மனிதனின் இகோவை குறைக்கும் என்று அடிக்கடி சொல்லுவார் என்று அஜித்தை பற்றி சொல்லி பிரமிக்கிறார் சில்வா.

"என்னை அறிந்தால்” ஷூட்டிங் ஸ்பார்ட் ஆல்பத்திற்கு: http://cinema.vikatan.com/articles/news/25/8320

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close