’த்ரிஷ்யம்’ ஸ்டைலில் மீண்டும் களம் இறங்கும் மோகன்லால்! | மோகன்லால், மலையாளம், ப்ரித்விராஜ்

வெளியிடப்பட்ட நேரம்: 13:21 (22/01/2015)

கடைசி தொடர்பு:13:21 (22/01/2015)

’த்ரிஷ்யம்’ ஸ்டைலில் மீண்டும் களம் இறங்கும் மோகன்லால்!

மலையாள உலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் அடுத்த படத்தில் மீண்டும் இயக்குநர் மேஜர் ரவியுடன் இணையவிருக்கிறார். தமிழில் ’அரண்’ உள்ளிட்ட பல ராணுவம் மற்றும் போர் சார்ந்த படங்களை இயக்கியிருப்பவர் இயக்குநர் மேஜர் ரவி. இவரின் ஆஸ்தான நடிகர் மோகன்லாலை வைத்து அடுத்தப் படம் எடுக்கவிருக்கிறார். ஆனால் இந்தப் படத்தில் மோகன்லால் ராணுவ வீரராக இல்லாமல் குடும்பஸ்தராக நடிக்கிறார்.

“பேமிலி சப்ஜெக்ட், நீங்க குடும்பஸ்தராக நடிக்கவேண்டும் என்று கதையை சொன்னதும் ஒகே சொல்லிவிட்டாராம் மோகன்லால், இந்தப் படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்” என்றார் இயக்குநர் மேஜர் ரவி.

‘கீர்த்தி சக்ரா’,‘குருஷேக்த்ரா’,‘கண்டகார்’, ’கர்மயோதா’ போன்ற படங்களில் மோகன் லால் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து படம் வெற்றியும் பெற்றது. இந்த படங்கள் அனைத்தையும் மேஜர் ரவி இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேஜர் ரவி இயக்கத்தில், ப்ரித்வி நடிப்பில் ‘பிக்கெட் 43’ வரும் ஜனவரி 23ல் வெளிவரவிருக்கிறது. ராணுவம் சார்ந்த இப்படத்தில் ப்ரித்வி ராணுவ வீரராக நடித்துள்ளார். முதலில் ‘பிக்கெட் 43’ படத்திற்கு மோகன்லால் தான் நடிப்பதாக இருந்தது. இறுதியில் யூத் ஃபுல் நடிகராக இருக்கவேண்டும் என்று படத்தில் ப்ரித்வி நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.மேலும் மோகன்லால் குடும்ப தலைவராக நடித்த ‘த்ரிஷ்யம்’ படம் தென்னிந்திய அளவில் மிகப்பெரும் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது என்பதால் இதுவும் அதுபோன்ற ஒரு கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்