கல்விக்காக ஒரு உரிமைப்போராட்டம் - வஜ்ரம் படம் குறித்து இயக்குநர் ரமேஷ்செல்வன்!

’பசங்க’, ’கோலிசோடா’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி மற்றும் குட்டிமணி ஆகிய நால்வரும் நடிக்கும் ‘வஜ்ரம்’ படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. கதாநாயகியாக பவானிரெட்டி என்ற புதுமுக நடிகை அறிமுகமாகிறார். மற்றும் ஜெயபிரகாஷ், தம்பிராமையா, மயில்சாமி, மூணார் ரமேஷ் போன்ற நடிகர்களும் படத்தில் உள்ளனர்.

இப்படத்தின் இயக்குநர் ரமேஷ்செல்வன் கூறுகையில் “முழுக்க முழுக்க கல்வியை மையமாக வைத்து, கல்விதான் ஒரு குடும்பத்தின் முன்னேற்றத்தையும், ஒரு நாட்டின் முன்னேற்றத்தையும் கொண்டுவர முடியம் என்று, கல்விக்காக போராடும் நான்கு சிறுவர்களின் கதை தான் இது. இதே சிறுவர்கள் ‘கோலிசோடா’ படத்தில் ஒரு மனிதனின் அடையாளம் எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துரைத்தது குறிப்பிடத்தக்கது. 

அனைவருக்கும் கல்வி திட்டம் அடிப்படையில் ஆதரவற்றவர்களாய் கிடந்த நான்கு சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை வைத்து ஒரு பள்ளிக்கூடம் நடத்துகிறார் தம்பிராமையா. எதிரிகளால் அப்பள்ளி அபகரிக்கப்படுகிறது. பின்னர் மாணவர்கள் அனைவரும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுகின்றனர்.

நான்கு சிறுவர்களும் அங்கிருந்து தப்பித்து எப்படி எதிரியிடம் போராடி தம்பிராமையாவையும், பள்ளியையும் மீட்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை. இந்த நான்கு பையன்களும் மிக இயல்பாக நடித்துள்ளனர். படப்பிடிப்பு அச்சன்கோவில், மூணாறு, சாலக்குடி, அஸ்ஸாம் போன்ற இடங்களில் படபிடிப்பு நடந்து முடிந்திருக்கின்றது. படம் வருகிற பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி உலக முழுவதும் வெளியாகும் என்றார் ‘வஜ்ரம்’ இயக்குநர் ரமேஷ்செல்வன். 

’வஜ்ரம்’ பட ஆல்பத்திற்கு: http://cinema.vikatan.com/articles/news/23/8380

கதாநாயகி பவானி ரெட்டி ஆல்பத்திற்கு: http://cinema.vikatan.com/articles/news/22/8381

Do you like the story?

Please Appreciate the Author by clapping!