பிரபல தமிழ் நடிகை த்ரிஷா- தொழிலதிபர் வருண்மணியன் நிச்சயதார்த்தம் சென்னையில் இன்று நடைபெற்றது.
சினிமாவில் 12 ஆண்டுகளாக நீடித்து வரும் த்ரிஷாவின் திருமணம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியானது.
இதனிடையே, தொழிலதிபரான வருண்மணியனுடன் சேர்ந்து த்ரிஷா இருப்பது போன்ற படங்கள் வெளியானது. இதனால் த்ரிஷாவுக்கு காதல் மலர்ந்துள்ளதாக செய்தி வெளியானது. ஆனால், இதனை த்ரிஷா மறுத்தார்.
இந்நிலையில், திடீரென வருண்மணியனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கடந்த ஜனவரி 7ஆம் தேதி த்ரிஷா திடீரென அறிவித்தார். மேலும், ஜனவரி 23 ஆம் தேதி ( இன்று) திருமண நிச்சயதார்த்தம் நடைபெறும் என்றும் கூறியிருந்தார்.
அதன்படி, சென்னையில் இன்று காலை த்ரிஷாவுக்கும், வருண்மணியனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
த்ரிஷா சிவப்பு நிற பட்டுப்புடவையும், வருண்மணியன் பட்டு வேஷ்டியும் அணிந்திருந்தனர். திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்களும், நண்பர்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.
த்ரிஷா -வருண்மணியன் நிச்சயதார்த்தம் ஆல்பத்திற்கு: http://cinema.vikatan.com/articles/news/22/8396