ஆடிப்பாடி மகிழ்ந்த 1980ல் நடித்த நடிகர்- நடிகைகள்!

வெளியிடப்பட்ட நேரம்: 16:08 (23/01/2015)

கடைசி தொடர்பு:16:08 (23/01/2015)

ஆடிப்பாடி மகிழ்ந்த 1980ல் நடித்த நடிகர்- நடிகைகள்!

1980ல் பிரபலமாக இருந்த நடிகர்- நடிகைகள் சென்னையில் சந்தித்து பேசியதோடு, தங்கள் மலரும நினைவுகள் பகிர்ந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

தமிழ் பட உலகில், 1980 முதல் 1990-ம் ஆண்டு வரை பிரபலமாக இருந்த நடிகர்-நடிகைகள் ஆண்டு தோறும் சந்தித்து தங்கள் நட்பை புதுப்பித்துக் கொள்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான சந்திப்பு, சென்னை சாந்தோமில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நடந்தது.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார், அவருடைய மனைவி ராதிகா சரத்குமார் ஆகிய இருவரும் இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். நடிகர்கள் சிவகுமார், பிரபு, ராதாரவி, வாகை சந்திரசேகர், விஜயகுமார், மோகன், சரத்பாபு, சுரேஷ், சரண்ராஜ், ராம்கி, அருண்பாண்டியன், ராஜா, பிரதாப் போத்தன், நாசர், எஸ்.வி.சேகர், சின்னி ஜெயந்த், தியாகு, டெல்லிகணேஷ், ராஜ்குமார், ரவிகுமார், நடிகைகள் ஸ்ரீப்ரியா, லதா, சுஹாசினி, ரேவதி, குஷ்பு, பூர்ணிமா பாக்யராஜ், நதியா, மீனா, ரோஜா, ரேகா, அர்ச்சனா, ரம்யாகிருஷ்ணன், சீதா, மதுபாலா, ஊர்வசி, ரதி அக்னிஹோத்ரி, ரூபினி, லிசி, மேனகா, நிரோஷா, நளினி, அருணா, குயிலி, வடிவுக்கரசி, ஜோதிலட்சுமி, டான்ஸ் மாஸ்டர்கள் புலியூர் சரோஜா, கலா, பின்னணி பாடகி பவதாரணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், சிலம்பரசன், தனுஷ், விஜய் சேதுபதி, பிரசன்னா, கணேஷ் வெங்கட்ராம், வைபவ், இமான் அண்ணாச்சி, சங்கீதா, நமீதா, பிந்து மாதவி, நீதுசந்திரா, வேதிகா, ஐஸ்வர்யா, அபிராமி, பாடல் ஆசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ்.பி.முத்துராமன், பாக்யராஜ், பாண்டியராஜன், ஆர்.சுந்தர்ராஜன், பி.வாசு, ஆர்.வி.உதயகுமார், விக்ரமன், ஹரி, சுந்தர் சி.வெற்றிமாறன், டி.பி.கஜேந்திரன், அரவிந்தராஜ், வசந்த், கஸ்தூரிராஜா, சந்தானபாரதி, மனோபாலா, சமுத்திரக்கனி, ஏ.வெங்கடேஷ், தயாரிப்பாளர்கள் ஏவி.எம்.சரவணன், பஞ்சு அருணாசலம், திருப்பூர் மணி, கேயார், ஜி.தியாகராஜன், டி.சிவா, கே.எஸ்.சீனிவாசன், சித்ராலட்சுமணன், அன்புசெழியன், புஷ்பா கந்தசாமி, வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம், கவிஞர் சினேகன் ஆகியோரும் வந்திருந்தனர்.

சந்திப்பு நிகழ்ச்சிக்குப்பின் அனைவருக்கும் விருந்து அளிக்கப்பட்டது. அப்போது நடிகர்-நடிகைகள் அனைவரும் நடனம் ஆடி மகிழ்ந்தார்கள். முன்னதாக நடிகை ஷோபனா குழுவினரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close