படிப்பில் பிஸியாகிவிட்ட லட்சுமி மேனன்! | லட்சுமி மேனன், கொம்பன், lahshmi menon, Komban

வெளியிடப்பட்ட நேரம்: 15:39 (24/01/2015)

கடைசி தொடர்பு:15:39 (24/01/2015)

படிப்பில் பிஸியாகிவிட்ட லட்சுமி மேனன்!

'சுந்தரபாண்டியன்' மற்றும் 'கும்கி' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் சரசரவென தமிழ் ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இஅடம் பிடித்தவர் லட்சுமிமேனன். தொடர்ந்து ‘பாண்டியநாடு’, ‘மஞ்சப்பை’,’ நான் சிகப்பு மனிதன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது படிப்பில் கொஞ்சம் பிஸியாகி விட்டாராம்.

லட்சுமிமேனன் தன்னுடைய படிப்பு மற்றும் நடிப்புத் துறை இரண்டிலும் கவனம் செலுத்த முயற்சித்துவருகிறார். தற்போது 12ம் வகுப்பு படிக்கும் லட்சுமிமேனன் வரவிருக்கும் பொதுத் தேர்வுக்காக பிஸியாக படித்துக் கொண்டிருக்கிறார். மேலும் தற்போது மாதிரித் தேர்வுக்கு கடினமாக படித்துவருகிறாராம். தேர்வுகள் முழுவதும் ஏப்ரல் வரை இருப்பதால் தேர்வு முடிந்தப் பிறகே மீண்டும் நடிக்கப் போகிறார் லட்சுமி.

அது வரை நடிப்புக்கு ‘நோ’ சொல்லி விட்டார் மலையாளத்து தேவதை. எனினும் தமிழில் லட்சுமி மேனன் மற்றும் கார்த்தி நடிப்பில் ‘கொம்பன்’ வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close