நெட்டில் வெளியான பாகுபலி - படக்குழுவினர் அதிர்ச்சி! | bahubali, prabas. anushka, tamanna, rana, பாகுபலி, பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, ராஜமௌலி,

வெளியிடப்பட்ட நேரம்: 16:04 (27/01/2015)

கடைசி தொடர்பு:16:04 (27/01/2015)

நெட்டில் வெளியான பாகுபலி - படக்குழுவினர் அதிர்ச்சி!

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் பிரம்மாண்டமாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் படம் ‘பாகுபலி’. ஏப்ரலில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் யாவும் முடிந்து ரீரெக்கார்டிங், டப்பிங் பணிகள் நடந்து வருகிறது. 

இந்நிலையில் படத்தின் 12 நிமிட காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். படத்தின் தயாரிப்பாளர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். படத்தின் கிராஃபிக்ஸ பணிகளில் ஈடுபட்ட ஒருவர்தான் இதை இணையத்தில் வெளியிட்டுயிருப்பதாகவும், இதையடுத்து சம்மந்தப்பட்ட அந்த பணியாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.

எனினும் 2 வருட காலமாக பணியாற்றி பெரும் பொருட் செலவில் உருவாகி வரும் இப்படம் திரையுலக ரசிகர்களை பெரிதும் எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாக்கிய படம். திடீரென படத்தின் 12 நிமிட காட்சிகள் வெளியானது படக்குழுவினரை வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்